Categories
செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“தேசிய பாதுகாப்பு சட்டம்” டெல்லியில் பாய்கிறது.

டெல்லியில் NSE  எனப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மூன்று மாதங்களுக்கு காவல்துறை பயன்படுத்திக்கொள்ள ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் டெல்லியில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் என பல்வேறு இடங்களில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சமாளிக்க நாளை முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை 3 மாதங்கள் டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த ஆளுநர் அனில் பைஜல் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த  சட்டத்தில் கைது செய்யப்படுவோர் குற்றச்சாட்டு இல்லாமல் 12 மாதங்கள் வரை சிறையில் வைக்க போலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கைதுக்கான  காரணத்தை 10 நாட்களில் கூறவேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை. மேலும் கைது செய்யப்படும் நபர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்போது வழக்கறிஞரை வைத்து கொள்ள முடியாது

Categories

Tech |