தகனம் செய்ய வேண்டிய சடலங்கள் சாலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி கண் கலங்க வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தீவிரம் அதிகமாக இருக்கிறது. மேலும் அங்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தட்டுப்பாடும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்காமல் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர்.
Shubhashnagar Crematorium. pic.twitter.com/pXQmWKXC0s
— Bharat Jodo Nyay Yatra ! (@Shayarcasm) April 26, 2021
இந்நிலையில் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்காக சுபாஷ் நகர் சுடுகாட்டில் சடலங்கள் நீண்ட வரிசையில் காத்து இருக்கின்றது. மேலும் சுடுகாட்டில் பல சடலங்களை தகனம் செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தகனம் செய்யப்பட வேண்டிய சடலங்கள் நீண்ட வரிசை காத்திருக்கும் காட்சியை கண்ட போது நெஞ்சை பதறவைக்கிறது. இது தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது.