கமலுக்கெதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த பேச்சுக்கு சர்சையை ஏற்படுத்தியது. மேலும் இதற்க்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் கமல் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த வழக்கறிஞ்சர் அஸ்வினி குமார் உபாத்யாயா டெல்லி உயர்நீதிமன்றத்தில் கமலுக்கெதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது, தமிழகத்தில் கமல்ஹாசன் பேசியதற்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது ஏன்? என்று கேள்வி எழுப்பிய டெல்லி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.