டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா டிங்ரே செஹால் ராஜினாமா செய்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் வழக்கை விசாரித்தவர் இவர். அடுத்த மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் நீதிபதி இன்று ராஜினாமா செய்துள்ளார். டெல்லி மாநில நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி சங்கீதா திங்க்ரா சேகல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறவிருந்த நீதிபதி சேகல், விரைவில் தனது புதிய பதவியை ஏற்றுக்கொள்வார் என மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் இந்த புதிய பதவியில் வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சட்டம் மற்றும் நீதி அமைச்சின் அறிவிப்பின்படி, நீதிபதி சேகல், டெல்லி உயர்நீதிமன்ற அலுவலகத்தில் இருந்து அரசியலமைப்பு சட்டம் 217 வது பிரிவின் (1) பிரிவு (1) ன் விதிமுறைகளுக்கு இணங்க டெல்லி உயர்நீதிமன்ற அலுவலகத்தில் இருந்து ராஜினாமா செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். பொதுவாக உயர் நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது 62 ஆண்டுகள் ஆகும்.
நீதிபதி சேகல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலாக 2013 ஏப்ரல் முதல் 2014 டிசம்பர் வரை பணியாற்றினார். மேலும் பதிவாளர் (விஜிலென்ஸ்) ஆகவும் பணியாற்றியுள்ளார். இவர் டிசம்பர் 15, 2014 அன்று உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். இதையடுத்து, ஜூன் 2, 2016 அன்று நிரந்தர நீதிபதியாக பதவி வகித்தார். மேலும் இவர் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.