Categories
தேசிய செய்திகள்

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி…. வீட்டிலே தனிமை…..!!

 தலைநகர் டெல்லியில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால், அங்கு ஆறு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி உள்ளனர்.

உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் கொரோனா பாதிப்பில் சிக்கியுள்ளது. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு 6- நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியுள்ளன. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ஒருவரான  டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவுக்கு கொரோனா தொற்று இருப்பதாக நேற்று உறுதி செய்துள்ளனர்.

இதனால் அவர் மருத்துவமனைகளுக்குசெல்லாமல் வீட்டிலே தனிமை படுத்தி உள்ளார். அதேசமயம் அவரது கணவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக டெல்லி அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி வீட்டிலிருந்தபடியே கொரோனா நோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories

Tech |