Categories
மாநில செய்திகள்

“தாமதமான நீதி”…. இதுதான் உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சி நாள்..‌‌.. விடுதலையான ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி கருத்து….!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ரவிச்சந்திரன் ஜெயிலில் இருந்து வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த மகிழ்ச்சி உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சி நாள்‌. தமிழ் பேசும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். துயரம் எனக்கானது என்ற போதிலும் மகிழ்ச்சி உங்கள் அனைவருக்குமானது. எங்களுக்காக உயிர் நீத்த செங்கொடியின் தியாகத்தை என்னுடைய நெஞ்சில் ஏந்துகிறேன்.

எங்களுடைய விடுதலைக்கு உதவி செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி நான் சமுதாயத்திற்கு உதவும் வகையில் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வதோடு, புத்தகங்களையும் எழுத இருக்கிறேன். அதோடு என்னுடைய தோழர்களுடன் சேர்ந்து சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன். எங்களுடைய விடுதலைக்காக போராடிய வழக்கறிஞர் திருமுருகன் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விடுதலை தான் இத்தனை வருட வலிக்கான நிவாரணி. கடந்த 2004-ம் ஆண்டு எங்களுக்கு விடுதலை கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் மத்திய அரசால் தான் விடுதலை கிடைக்காமல் போனது. 15 வருடங்கள் மத்திய அரசு எங்களுடைய விடுதலையை தாமதப்படுத்தியுள்ளது. தமிழ் மக்களுக்கான கருணையை மத்திய அரசிடம் எதிர்பார்க்க முடியாது. திருமணம் செய்து கொள்வது குறித்த எந்த எண்ணமும் கிடையாது. என்னுடைய 31 வருட சிறை வாழ்க்கையில் எனக்கு மிஞ்சியது என்னுடைய நண்பர்கள்‌ மட்டும் தான்‌.

இது அரசியல் வழக்கு என்பதால் வழக்கு இன்னும் முடிவடையாமல் தான் இருக்கிறது. விசாரணையை சிபிஐக்கு மாற்றினாலும் எதுவும் ஆகப்போவது கிடையாது. ஏனெனில் இந்த நிகழ்வுக்கு பின்னால் வெளிநாட்டு உள்நாட்டு சக்திகள் இருக்கிறது. அவர்கள் மீது கை வைக்க முடியாது என்பதால் தான் எங்களுக்கு ஈசியாக தண்டனை கொடுத்து விட்டார்கள். தமிழகத்தில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் சிறைவாசிகளுக்கு சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். மேலும் இதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |