Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.100 கோடிக்கு கீழ் குறைந்து வரும் மதுபான விற்பனை – விலை உயர்வு, போதிய மதுபானம் இல்லாததால் ஏமாற்றம்!

தமிழகத்தில் முதல் இரண்டு நாட்கள் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் மது விற்பனையாகியிருந்த நிலையில் அதனை தொடர்ந்து டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.100 கோடிக்கு கீழ் குறைந்துள்ளது.

முதல் நாள் ரூ.163.5 கோடி, இரண்டாம் நாள் ரூ.133 கோடி, 3வது நாள் ரூ. 100 கோடிக்கும், நான்காம் நாள் ரூ. 91 கோடி, ஐந்தாம் நாள் ரூ. 98.5 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் 98.5 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் திருச்சி மண்டலத்தில் ரூ. 24.4 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.23.5, கோடி சேலம் மண்டலத்தில் ரூ. 22.7 கோடி, கோவையில் 20.9 கோடி, மற்றும் சென்னை மண்டலத்தில் 6.8 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது.

தொடர்ந்து மது விற்பனையானது குறைந்து வருகிறது. மதுவிற்பனை குறைந்ததற்கு டாஸ்மாக் கடைகளில் போதிய மதுபானம் இல்லாதது தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மதுபானங்கள் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் குறைந்த மற்றும் நடுத்தர விலை மதுபானங்கள் இல்லாததால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

விலை அதிகம் உள்ள உயர்ரக மதுபானங்களை வாங்கி செல்ல நிர்பந்திப்பதாக மதுப்பிரியர்கள் புகார் அளித்துள்ளனர். டாஸ்மாக்கிற்கு மதுபானம் வழங்கும் நிறுவன ஆலையில் 30% அளவிற்கே உற்பத்தி நடக்கிறது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 1,700 கடைகள் மூடிக்கிடக்கின்றன. மூடிக்கிடக்கும் கடைகளில் ரூ. 350 கோடிக்கு மதுபான வகைகள் இருப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மூடிக்கிடக்கும் கடைகளில் உள்ள மது பானங்களை மற்ற கடைகளுக்கு மாற்றி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

Categories

Tech |