நவம்பர் 21ஆம் தேதிக்குள் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, திமுக துணை பொதுச்செயலாளர் பெரியசாமி, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி கூறியதாவது, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கரூரில் 20 மாதத்திற்குள் பேருந்து நிலையத்தை மாதத்திற்குள் அமைக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஒன்பது மாதங்கள் ஆகியும் இதுவரை ஆட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.பேருந்து நிலையத்திற்கு நிலம் அளித்தவர்கள் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டு பேருந்து நிலையம் கட்டாமல் தாமதப்படுத்தி வருகின்றன.
வருகின்ற நவம்பர் 21ஆம் தேதிக்குள் பேருந்து நிலையம் கட்ட முடிவு எடுக்கப்படாவிட்டால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், ஜாதி, மாதத்திற்கு அப்பாற்பட்டு கட்டப்பட்ட திருமண மண்டபம் பல ஆண்டுகளாக கட்டியும் திறக்கப்படாமல் உள்ளது. அதனையும் அரசு 15 நாட்களுக்குள் திறக்காவிட்டால் மண்டபத்தின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றார்.