Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மக்களே ரெடியா இருங்க”…. டிச.12- ம் தேதியில் இருந்து அனுமதி…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

குற்றாலத்தில் இந்த மாதம் 20-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான மிகவும் பிரபலமான குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். மேலும் தென்காசி பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் ஏராளமான பகுதிகளின் சுற்றுலா வருவாய் ஆதாரமாகவும் குற்றாலம் விளங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் இந்த மாதம் 20-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் கோபால சுந்தரராஜ் அறிவித்துள்ளார். இதற்குரிய நிலையான வழிகாட்டுதலில் நடைமுறைகளும் வகுக்கப்பட்டு அவற்றை கண்காணிப்பதற்காக பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் குற்றாலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சேதமடைந்த தரை தளங்கள், தடுப்பு கம்பிகள், உடைமாற்றும் அறை போன்றவற்றை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சீரமைப்பு பணிகள் கலெக்டர் கோபால சுந்தரராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அபூபக்கர் ஆகியோர் ஆலோசனையின்படி நடைபெறுகிறது. இந்நிலையில் அங்கு சீரமைப்பு பணிகளை குற்றாலம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி மாணிக்கராஜ், உதவி செயற்பொறியாளர் மணிமாறன், உதவி பொறியாளர் முகைதீன், சுகாதார அலுவலர் ராஜகணபதி போன்றோர் ஆய்வு செய்தனர்.

Categories

Tech |