கடந்த சில நாட்களுக்கு முன்பாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவான நிவர் புயலால், தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அதனுடைய பாதிப்பில் இருந்தும், தாக்கத்தில் இருந்தும் இன்னும் பல மாவட்ட மக்கள் வெளியே வரவில்லை. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் புதிய புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க கன்னியாகுமரி மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் டிசம்பர் 1ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.