ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி வருகின்ற அக்டோபர் மாதம் கிரெடிட் கார்டு,டெபிட் கார்டு வரை அனைத்திற்கும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் கார்டு ஆன் ஃபைல் டோக்கனைசேஷன் விதிமுறைகள் அமலுக்கு வருவதால் டெபிட் மற்றும் கிரெடிட் காடுகளுக்கான ஆன்லைன் பேமெண்ட் விதிமுறைகள் மாற்றம் செய்யப்படுகிறது.
இதனால் பிளாட்ஃபார்ம்கள் எந்த வடிவத்திலும் வாங்குபவரின் கார்டு நற்சான்றிதழ்களை சேமிக்க முடியாது.புதிய ரிசர்வ் வங்கி விதிமுறையின் படி ஒரு கடைக்காரர் எதையாவது ஷாப்பிங் செய்யும்போது அவர்களின் முழு விவரங்களையும் அட்டையில் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.இதன் மூலம் நமது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்கள் வெளியில் கசிவது தவிர்க்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.