திருப்பத்தூர் அருகே தூங்கும் போது விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கம்பம் கிருஷ்ண பள்ளியை சேர்ந்தவர் முருகேசன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். முருகேசனின் தம்பி வெங்கடேசன். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட அவரது இன்சூரன்ஸ் பணம் 3 லட்சம் வெங்கடேசனின் மனைவி சித்ராவிற்கு வந்துள்ளது.
இதை அறிந்த முருகேசன் விவசாய நிலத்தை பராமரிக்க ரூபாய் 10,000 கடனாக தருமாறு சித்ராவிடம் கேட்டு வாங்கியுள்ளார். அதன் பின பணத்தை அவர் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சித்தரா ஊர் முழுவதும் தவறாக சொல்லிக்காட்டி முருகேசனை கேவலப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து சித்ராவின் தம்பியான சுந்தரவடிவேலு என்பவரிடம் முருகேசன் கூற ஆத்திரமடைந்த அவர் நானும் தான் உன்னிடம் இருந்து பணம் பெற்றேன்.
என்னையும் நாளைக்கு இப்படித்தான் சொல்லிக் காட்டுவாய் என்று கூறி பணத்தை கொடுத்துவிட்டு கோபமாக சென்றுள்ளார். தம்பி கோபமாக சென்றதற்கு முருகேசன் தான் காரணம் என்ற விரக்தியில் அரிவாளுடன் அவர் முருகேசன் வீட்டுக்குள் சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த முருகேசனையும் அவரது மனைவி விஜயாவையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.இதில்,
முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க, படுகாயமடைந்த விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின் இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் முருகேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பணிக்கு அனுப்பி வைத்துவிட்டு, விஜயாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.