தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1 சதவீதத்தை கடந்துள்ளது மக்களுக்கு அச்ச உணர்வை ஏறப்டுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 46,504ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 16ஆவது நாளாக பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 13ஆம் நாளாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இன்று ஒரே நாளில் 797 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 25,344ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மொத்த உயிரிழப்பு 479ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 32 பேரும், தனியார் மருத்துவமணையில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 35 மரணம் அடைந்துள்ளனர். இதில் வேறு நோய் இல்லாதபாதிப்பில்லாத 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30- 50 வயதுக்குட்பட்ட 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.