Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு சதவீதம் குறைவு: முதல்வர் பழனிசாமி!!

கொரோனா காரணமாக பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது. 3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா தாக்கம் குறித்து பேசி வரும் முதல்வர் தெரிவித்ததுவது, ” இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு சதவீதம் குறைவு எனவும், கொரோனா இறப்பு விகிதம் 0.67% ஆக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கின்றது. மேலும் வெளிமாநிலத்தில் இருந்தும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன என தெரிவித்தார்.

மேலும் ஊரகப் பகுதிகளில் நிபந்தைகளுடன் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன என தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை பொறுத்தவரை ஏறி பின் இறங்கும் என்பதால் மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |