மகாராஷ்டிரா மாநிலத்தில் 8,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 342 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள இறப்புகள் விகிதம் 4.24% ஆக உள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 34வது நாளாக நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மேலும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தற்பொழுது, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,917லிருந்து 27,892ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 826 லிருந்து 872ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,914லிருந்து 6,185ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 48 இறப்புகள் பதிவாகியுள்ளது. மேலும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரா தான். 8,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 342 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை 1,188 கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.