Categories
உலக செய்திகள்

மல்யுத்த வீரருக்கு மரண தண்டனை… உச்ச நீதிமன்றம் அதிரடி… கொந்தளித்த நெட்டிசன்கள்… ஏன் தெரியுமா?

அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மல்யுத்த வீரருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

கடந்த 2018 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை சரியாக கையாளாத ஈரான் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மல்யுத்த வீரரான நவ்வித் என்பவருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதோடு அவரது சகோதரர்களுக்கும் சிறை தண்டனை வழங்கப் பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

குற்றங்களை செய்வது, சட்டத்திற்கு எதிராக கூட்டங்களை கூட்டுவது, மூத்த தலைவர்களை அவமதித்தது போன்ற செயல்களை செய்ததினால் மல்யுத்த வீரர் தண்டனை கொடுக்கப்பட்டதாக ஈரான் நாட்டு உச்ச நீதி மன்றம் சார்பாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. மரண தண்டனை கொடுப்பதில் ஈரான் சீனாவுக்கு அடுத்ததாக இடம் பிடித்துள்ளது. கடந்த வருடம் மட்டும் 200க்கும் அதிகமானவர்களுக்கு அந்நாட்டில் மரண தண்டனை கொடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது

 

Categories

Tech |