அமெரிக்காவில் இந்த வருடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் நபர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் இந்த வருடத்தில் முதல் முறையாக ஒரு நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் வசித்த டொனால்ட் கிராண்ட் என்ற 46 வயது நபர் கடந்த 2001 ஆம் வருடத்தில் சிறையில் இருந்த தன் காதலிக்கு ஜாமீன் வாங்க ஒரு ஓட்டலில் நுழைந்து கொள்ளையடித்திருக்கிறார்.
அப்போது, அவரை தடுத்து ஓட்டல் பணியாளரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததோடு மற்றொருவரை கத்தியால் குத்தி கொன்றார். இதற்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அவருக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்போது, பத்திரிக்கையாளர்கள், அவரின் உறவினர்கள், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ஆகியோர் அங்கு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.