Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்; திதியால் அம்பலமான சதி; வெளியாகும் பரபரப்பு தகவல் ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆணையத்தின் உடைய பல்வேறு பக்க அறிக்கையில் 553 வது பக்கத்தில் பல அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் இடம்பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.  எக்மோ சிகிச்சை நிபுணரான நளினி என்பவரது சாட்சியத்தின் வாக்குமூலம் படி,

டிசம்பர் நான்காம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு ஜெயலலிதா இறந்தது உறுதி செய்யப்பட்டது, ஜெயலலிதாவுக்கு டிசம்பர் நான்காம் தேதி மதியம் 3.50 மணிக்கு இதய செயல்பாடு எதுவும் இல்லை என்று  செவிலியர்கள், மருத்துவர்கள் சாட்சியம் அளித்து இருக்கக்கூடிய நிலையில், டிசம்பர் நான்காம் தேதி 3.50 மணிக்கு ஜெயலலிதா இறந்ததை கருத்தில் கொண்டே முதலாம் ஆண்டு திதியை கொண்டாடப்படுவதாகவும், ஜெயலலிதா டிசம்பர் நான்காம் தேதி இறந்ததை  கருத்தில் கொண்டு திதி கொடுத்ததை ஜெயலலிதா கார் ஓட்டுனராக இருந்த பூங்குன்றனும் உறுதி செய்திருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

பல அதிர்ச்சி தரக்கூடிய புதிய தகவல்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்று இருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் உடல்நல குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதாக ஆணையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.  சசிகலா உறவினர் சிவகுமார் மீதும் நடவடிக்கை எடுக்க ஆறுமுக சாமி ஆணையம் பரிந்துரை செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மயக்கமடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன என்றும், ஆணையத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |