Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக முன்னாள் நிர்வாகி மரணம்….. அடுத்தடுத்த இறப்பால் கழகத்தினர் அதிர்ச்சி …..!!

கடந்த சில மாதங்களாகவே திமுக நிர்வாகிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து மரணம் என செய்தி கழகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று கூட திமுகவின் பொதுச்செயலாளரும் , மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான க.அன்பழகன் மரணம் திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தது.

க.அன்பழகன் மரணத்தில் இருந்து திமுகவினர் மீள்வதற்குள் அடுத்த மரணம் நிகழ்ந்துள்ளது.  முன்னாள் சட்டமன்ற மேலவை திமுக உறுப்பினர் ப.தா முத்து (90 வயது ) உடல்நலக்குறைவால் ராசிபுரத்தில் காலமானார். 1968 முதல் 1974 சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் , சேலம் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தவர்.  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பேராசிரியர் அன்பழகனின் நெருங்கிய நண்பர் ஆவார்.

Categories

Tech |