Categories
உலக செய்திகள்

பலரது உயிரை காப்பாற்றிய தமிழக மருத்துவர் மரணம்… அமைதியான சுபாவம் கொண்டவர் என சக மருத்துவர் புகழாரம்…!

பிரிட்டனில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் இறப்பு குறித்து சக மருத்துவ தங்களது நினைவலைகளை தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் ராயல் டெர்பி மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ண சுப்பிரமணியன் என்பவர் பணிபுரிந்து வந்தார். 46 வயதுடைய கிருஷ்ணன் பலரது உயிரைக் காப்பாற்றி வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவர் குறித்த நினைவலைகளை சக மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர். மருத்துவ அறக்கட்டளை தலைமை நிர்வாகிகாவின் போயல் கிருஷ்ணன் குறித்து கூறியதாவது, கிருஷ்ணன் கவனிப்பு தேவை படுபவர்களுக்கு ஆதரவாக கடுமையாக உழைத்தார். அவரின் உயிரிழப்பு அனைவரையும் பாதித்துள்ளது என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து கிருஷ்ணனின் சக மருத்துவர் ஜான்ஸ் வில்லியம்ஸ் கூறியதாவது, தனது பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருப்பவர் கிருஷ்ணன். பயிற்சி மருத்துவர்களுடன் அயராது பணியாற்றுபவர். பரபரப்பாக பணிபுரியும் சூழலிலேயே இருந்தார். அவர் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர். அவரின் குணங்களை அவருடன் பணியாற்றும் மருத்துவர்கள் நன்கு உணர்ந்து இருக்கின்றனர் என உருக்கமாகக் கூறினார்.

Categories

Tech |