கொரோனோ வைரசால் 63 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழக்க பலி எண்ணிக்கை இந்தியாவில் ஐந்தாக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ நோயின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் இந்த தொற்று வைரஸுக்கு ஆளாக்கப்பட்டு 4 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். அந்த வகையில்,
மும்பையில் 63 வயது முதியவர் ஒருவர் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் மட்டும் 2 பேர் கொரோனோவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.