தாயார் தன் மகளின் கண் முன்னேயே சுமார் 150 அடி உயர குன்றிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டிலிருக்கும் பிர்மிங்காமில் தாஹிரா என்னும் பெண் வசித்து வந்தார். இவருக்கு 5 பெண் பிள்ளைகள் உள்ளனர். இதனையடுத்து தாஹிராவும் அவருடைய குழந்தைகளும் விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காக மிகவும் பிரபலமான Durdle Door என்னும் சுற்றுலாத் தலத்திற்கு சென்றுள்ளார்கள்.
இந்நிலையில் தாஹிரா கடற்கரையில் நின்று கொண்டிருந்த தன்னுடைய மகளைப் பார்த்து, “இதோ நான் வருகிறேன்” என்று கூச்சலிட்டபடி 150 அடி உயர குன்றின் மேலிருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய தாஹிரா தனது மகளின் கண் முன்னே சுமார் 100 அடிக்கும் கீழே இருக்கும் பாறையின் மீது விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.