கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவியின் இறுதி சடங்கை அவருடைய குடும்பத்தினர்கள் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
இங்கிலாந்து நாட்டிலிருக்கும் ஹடர்ஸ்பீல்டில் எல்லா ஹாலிடே என்ற கல்லூரி மாணவி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த ஜூன் 1ஆம் தேதி லிவர்பூலில் இருக்கும் Irwell chambers என்ற வளாகத்திலுள்ள கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மருத்துவ குழுவினர்களுக்கு மாணவி கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்த தகவலை கொடுத்துள்ளார்கள். ஆனால் மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் எல்லா ஹாலிடேவின் உறவினரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.
ஆனால் மாணவி உயிரிழந்ததற்கான வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல் எல்லா ஹாலிடேவின் உறவினரை காவல்துறையினர் விடுவித்துள்ளார்கள். இதனையடுத்து எல்லா ஹாலிடேவின் குடும்பத்தினர்கள் அவருடைய இறுதி சடங்கை ஹடர்ஸ்ஃபீல்டிலிருக்கும் மாகாணத்தில் வைத்து நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.