புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழ்பாதி மடத்து குடியிருப்பில் ரவி என்பவர் வசித்து வந்தார். இவர் சுப்பிரமணியம் பகுதியில் துணை மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அரசர்குளம் கீழ்பாதி ராமன் ஏரியில் மின்மாற்றியில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ரவி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் மின்மாற்றியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார் .
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.