ஆப்கானிஸ்தானில் கேட்ட தொகையை கொடுத்தும் கூட கடத்தி சென்ற மருத்துவரை கொன்ற மர்ம கும்பலை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் முகமத் நாதர் என்னும் மருத்துவர் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் 2 மாதங்களுக்கு முன்பாக மர்ம கும்பலால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மர்ம கும்பல் மருத்துவருடைய குடும்பத்தினரிடம் பணமும் கேட்டுள்ளார்கள்.
அவ்வாறு மர்ம கும்பல் கேட்ட பணத்தை மருத்துவருடைய குடும்பத்தினர்கள் அவர்களிடம் கொடுத்தும் கூட ஈவு இரக்கமின்றி மருத்துவரை மர்மகும்பல் கொலை செய்து சாலையில் வீசியுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி மருத்துவருடைய குடும்பத்தை தொடர்பு கொண்ட மர்ம கும்பல் அவருடைய சடலம் கிடக்கும் இடத்தையும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் உள் விவகார அமைச்சகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மருத்துவரை கடத்திச்சென்று கொலை செய்த 2 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.