ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்துள்ள நிலையில் திடீரென அங்கு ஏற்பட்ட தகராறினால் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புவதற்காக காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளார்கள்.
மேலும் இந்தியா, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் விமானத்தின் மூலம் தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காகவும் காபூல் விமான நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால் காபூல் விமான நிலையத்தின் முன்பாக 100 க்கும் மேலான மக்கள் குவிந்துள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையத்தினுள் பொது மக்கள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏராளமானோர் விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு முயற்சித்துள்ளார்கள். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் கூட்டநெரிசலில் முன்னாடி நின்று கொண்டிருந்த 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் பலரும் கூட்ட நெரிசலில் சுவாசிப்பதற்கு திணறி மிகவும் சிரமப்பட்டுள்ளார்கள்.