சுவிட்சர்லாந்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளையடித்து சென்ற வாலிபர் ஒருவர் காவல் துறை அதிகாரியை கண்டதும் தப்பிப்பதற்காக நதியில் குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் Ticino என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாலிபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் அந்த வாலிபரை பிடிப்பதற்காக சென்றபோது அவர் ஓடியுள்ளார்.
இதனால் அந்த காவல்துறை அதிகாரி கொள்ளையடித்து சென்ற அந்த வாலிபரை பிடிப்பதற்காக துரத்தியுள்ளார்கள். அதன்பின் அந்த வாலிபர் Ticino பகுதியிலுள்ள நதியில் காவல்துறை அதிகாரியிடமிருந்து தப்பிப்பதற்காக குதித்துள்ளார். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் அந்த வாலிபரை சில மணிநேரத்திற்குப் பிறகு நதியிலிருந்து சடலமாக மீட்டுள்ளார்கள்.