Categories
உலக செய்திகள்

சீனாவில் உயிரிழந்த இங்கிலாந்து நபர்…. விசாரணையில் வெளிவந்த பின்னணி…. தகவல் வெளியிட்ட அதிகாரிகள்….!!

சீனாவில் பணிபுரிந்து வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நபரொருவர் மரணமடைந்தது தொடர்பான விசாரணையில் அதிரவைக்கும் உண்மை ஒன்று வெளிவந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த conner reed என்பவர் சீனாவிலுள்ள வுஹானில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் திடீரென conner அவருடைய அறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இவருடைய மரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வந்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது conner ரின் மரணம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை அதிகாரிகள் வெளியிட்டுள்ளார்கள்.

அதாவது conner கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவில்லை என்றும், அவர் போதைப் பொருட்களுடன் கஞ்சாவை சேர்த்து தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளதால் அது conner ரின் உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி அவருடைய மரணத்திற்கு வழிவகுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |