சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சையில் இருந்த மதுரை கால்நடைத்துறை உயர் அதிகாரி சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை பரிதாபமாக இறந்துவிட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ராஜதிலகம் என்பவர் மதுரை மாவட்ட மண்டல இணை இயக்குனராக கால்நடை பராமரிப்பு துறையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் கூறியதாவது , சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 5-ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த ராஜதிலகத்திற்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. இந்நிலையில் அவர் நுரையீரல் தொற்றுக் காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார். இதையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.