எரியூட்டப்பட்ட உடலின் மீது மற்றொரு நபர் விழுந்து உயிரிழந்துள்ளதாக வந்த தகவல் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைனில் படிக்க செல்போன் இல்லை என உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி நித்யஸ்ரீ இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நித்யஸ்ரீயின் உடல் எரிக்கப்பட்ட பின் அவரது உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின் யாரும் இல்லாத நேரம் பார்த்து எரியூட்டப்பட்ட உடலின் மீது மர்ம நபர் ஒருவர் மேலே விழுந்து உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்த தகவல்கள் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சோதனையிட்டபோது எரிந்த சாம்பல் துண்டுகளில் நித்யஸ்ரீயின் எலும்புத் துண்டுகளை தாண்டி, மற்றொருவரின் எலும்புகளையும் கைப்பற்றி தடவியல் நிபுணர்கள், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி இறந்தவர் ஒரு வாலிபர் என்பது தகனத்தில் கிடந்த வாட்ச், செல்போன் ஆகியவற்றின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நித்யஸ்ரீயின் மீது பேரன்பு கொண்டு இறந்துள்ள அந்த மர்மநபர் யார் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.