இன்று பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பிரதமர் மோடிக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு பூங்கொத்துடன் வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இன்று பிறந்தநாள் காணும் உங்களுக்கு எங்களது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வலிமையையும் கொடுத்து நாட்டு மக்களுக்கு தொடர்ந்து செயலாற்ற அருளுமாறு இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ட்விட்டரிலும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
Dear @narendramodi Ji, Please accept my heartiest greetings and best wishes on the joyous occasion of your birthday. May Almighty God bless you with good health and strength to serve our Nation and the people.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 17, 2019