தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது படம் ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய அப்டேட் ஒன்றினை நடன மாஸ்டர் ஜானி பகிர்ந்துள்ளார். அவர் வாரிசு படத்தின் அடுத்த பாடல் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. இந்த பாடலை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் படமாக்கியுள்ளோம். இப்பாடலில் சூப்பரான நடன ஸ்டெப்புகள் இடம் பெற்றுள்ளது. ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிக அளவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவின் காரணமாக விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.