Categories
உலக செய்திகள்

தலையில்லாமல் ஆற்றில் மிதந்த இளம்பெண்ணின் சடலம்… போலீசார் தீவிர விசாரணை..!!

ஆற்றில் பெண்ணின் சடலம் தலை இல்லாமல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் ஆரே ஆற்றில் பெண் ஒருவரது சடலம் தலை இல்லாமல் மிதந்து உள்ளது இதனை பார்த்த வழிப்போக்கர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததோடு அந்த சடலம் ஆணா பெண்ணா என்பது உறுதியாக தெரியவில்லை என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து மிதந்து கொண்டிருந்த சடலத்தை கரைக்குக் கொண்டுவந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது சடலமாக மீட்கப்பட்டது 22 வயதான எரித்திரிய பெண் என்பதும் அவர் பெர்ன் மண்டலத்தில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதைத் தவிர வேறு எந்த தகவல்களும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதோடு சடலத்தில் தலையின் இல்லை என்பது குறித்தும் கருத்து தெரிவிக்க மறுத்த காவல்துறையினர் குற்றச் சம்பவம் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை காவத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |