பெலாரஸ் நாட்டில் சமூக ஆர்வலர் ஒருவர், அவரின் குடியிருப்புக்கு அருகே இருக்கும் பூங்காவில் பிணமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலாரஸ் நாட்டின் சமூக ஆர்வலரான விட்டாலி ஷிஷாவ், உக்ரைன் நாட்டில் இருக்கும் க்யிவ் என்ற நகரத்தில் வாழ்ந்து வருகிறார். இவர், அங்கு வாழும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மக்களின் நல்வாழ்விற்காக சமூக சேவை அமைப்பை நடத்தி வந்துள்ளார். இதனிடையே கடந்த வருடம் நடந்த தேர்தலில், அலெக்சாண்டர் லுகாஷென்கோ என்ற நபர் வெற்றி பெற்றுள்ளார்.
அந்தத் தேர்தலில், இவரை எதிர்த்தவர்களை பழிவாங்க தனி கட்சியை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பயந்து பலர், பக்கத்து நாடுகளுக்கு சென்று தலைமறைவாகினர். இந்நிலையில் விட்டாலி ஷிஷாவ் நேற்று காலையில் தன் குடியிருப்பிலிருந்து வெளியே சென்றிருக்கிறார்.
நீண்ட நேரத்திற்குப் பின்பும், வீடு திரும்பவில்லை. எனவே, அவர் மாயமானதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு இன்று காலை அவரின் குடியிருப்பிற்கு அருகே இருக்கும் ஒரு பூங்காவில் அவர் சடலமாக தொங்கியுள்ளார். இது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.