Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி வயிற்றில் இறந்த குழந்தை…. எடுக்க தாமதமானதால்…. நேர்ந்த விபரீதம்….!!

கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த இறந்த குழந்தையை எடுக்காததால், கர்பிணியும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றத்தில் வசிக்கும் தம்பதிகள் சரத்பாபு – கனிமொழி. இந்நிலையில் கனிமொழி கர்ப்பிணி என்பதால் சென்னை ஆர் கே சாலையில் உள்ள ரூக்மணி பாய் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கர்ப்பமாகி பத்து மாதகாலம் ஆகியதால் ஸ்கேன் செய்வதற்காக மருத்துவரை பார்க்க கனிமொழி சென்றுள்ளார். அப்போது அவர் குழந்தை நன்றாக உள்ளது. இனி ஸ்கேன் எதுவும் எடுத்து தேவையில்லை என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து ஒரு சில தினங்கள் கழித்து ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் ருக்மணி பாய் உடனே மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா தனியார் மருத்துவமனைக்கு கனிமொழியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கனிமொழியின் வயிற்றில் இருந்த குழந்தையை வெளியில் எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் கோரிக்கையை நிராகரித்த இசபெல்லா மருத்துவர்கள் குழந்தை சுகப்பிரசவத்தில் தான் எடுக்க முடியும் என்று கூறி நாட்களை கடத்தி வந்துள்ளனர்.ஆனால் வயிற்றிலேயே இறந்த குழந்தையின் தொற்று காரணமாக, கனிமொழிக்கும் தொற்று ஏற்பட்டு உயிர் இழந்துள்ளார்.

இந்நிலையில் இதை கேட்டு ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் மருத்துவ கட்டணமாக 3 லட்சம் ரூபாய் செலுத்த மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தியதற்காக வழக்கு பதிந்த காவல்துறையினர், கனிமொழியின் உடல் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பின்ன மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று கூறிய பிறகு நடத்திய போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

Categories

Tech |