Categories
தேசிய செய்திகள்

இறந்து 10 ஆண்டு ஆனவர்… தடுப்பூசி போட்டதாக மெசேஜ்… அதிர்ச்சியில் குடும்பம்…!!!

குஜராத் மாநிலத்தில் உயிரிழந்தவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக வந்த மெசேஜால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது 18 வயது மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உயிரிழந்த தந்தை தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு வந்த மெசேஜால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த  விவகாரம் தொடர்பாக அவர் புகார் அளித்ததார். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் தகோத் மாவட்டத்தை சேர்ந்த நரேஷ் தேசாய் என்பவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அவரது தந்தை நட்வர்லால் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக கூறியிருந்தனர். ஆனால் அவரது தந்தை கடந்த 2011 ஆம் ஆண்டு தனது 93 வயதில் உயிரிழந்தார். அவர் இறந்து தற்போது வரை 10 ஆண்டுகள் ஆன நிலையில் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக வந்த மெசேஜ் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |