பிரபல நடிகர்களுக்கு தங்கையாக நடித்துள்ளதாக டிடி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் முன்பு போல் இல்லாமல் தற்போது சில முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா இமைபோல் காக்க திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Ooty, family drama, brothers & sister play,confusion and comedy.
Idelam sonnale u will know who is the Master. Yes happily part of Sundar.c sir’s film along with r handsome heroes @JiivaOfficial sir & @Actor_Jai wait 4gala family entertainer soon @khushsundar mam whn r u joining? pic.twitter.com/yqeZH8FUDW— DD Neelakandan (@DhivyaDharshini) February 25, 2022
இந்நிலையில் இவர் புதிதாக இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதனையடுத்து, பிரபல நடிகர்களான ஜீவா மற்றும் ஜெய்க்கு தங்கையாக நடித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.