டிடியின் அக்கா அழகாக நடனமாடியுள்ள வீடியோ காட்சிக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்னும் டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சுறுசுறுப்பாகவும், சுவாரசியமாகவும் செல்லும். இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அதில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் டிடி அவரது அக்கா நடனமாடியுள்ள அழகிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். டிடியின் அக்காவான பிரியதர்ஷினியும் சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. டிடி அக்கா அழகாக நடனமாடியுள்ள இந்த வீடியோ காட்சிக்கு ஏராளமான லைக்குகள் குவித்து வருகிறது.
https://www.instagram.com/reel/CPsxmIPDD3p/?utm_medium=copy_link