இமாச்சல பிரதேசத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால் பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வரும் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. எனவே, அனல் பறக்க நடந்த பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிந்தது.
இறுதி நாளான நேற்று அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இமாச்சலப்பிரதேசத்தில் 68 தொகுதிகள் இருக்கிறது. அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. டிசம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று வாக்குகள் எண்ணும் பணி நடக்க இருக்கிறது