Categories
பல்சுவை

விடிய… விடிய…. சிவபூஜை….. இந்த மந்திரம் போதும்….. பாவம் நீங்கி…. மோட்சம் பெற….!!

மகா சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானின்  மந்திரம் உச்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். 

மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானின் மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு மோட்சம் கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் கூற்றும், ஐதீகமாகும். அதன்படி சிவபெருமானின் பஞ்சசரகமாக விளங்கும் ஓம் நமசிவாய என்னும் மந்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இதிலுள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு அதன்படி ஓம் என்னும் வார்த்தை ஒருவிதமான அமைதியை குறிக்கிறது இதனை உச்சரிக்கும் போது மன அமைதி ஏற்படும். ந- குரோதன சக்தியையும், ம-ஆணவமலத்தையும், சி-சிவத்தையும், வ- திருவருள் சக்தியையும், ய-ஆன்மாவையும் குறிக்கிறது. இதனை உச்சரிக்கும் போது உடலில் உள்ள நோய் நொடிகள் நீங்கி அனைத்து தீமைகளும் நம்மை விட்டு விலகும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |