பிரிட்டன் மகாராணியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டேவிட் பெக்கம் வந்த நிலையில், அவருடன் மக்கள் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.
பிரிட்டன் நாட்டின் மகாராணியார் மறைவை தொடர்ந்து அவரின் உடலுக்கு மக்கள் நீளமான வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் பெக்காம், மக்களுடன் அமைதியாக பங்கேற்றார். அவரை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர்.
மேலும், சுமார் 12 மணிநேரங்களாக நின்ற மக்கள், டேவிட் பெக்காம் கூட்டத்திற்குள் எப்படி வந்தார்? என்று ஆச்சரியமடைந்தனர். அதன்பிறகு, அவரை புகைப்படம் எடுத்தார்கள். எனவே, கூட்டம் நகர்ந்து செல்லாமல் சிறிது நேரம் அங்கேயே நின்றுள்ளது. மேலும், தன்னுடன் நின்றவர்களுக்கு டேவிட், டோனட்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.