Categories
உலக செய்திகள்

தாமதமாக வந்த சொந்த மகள்…. காரணாம் கேட்டு தந்தை செய்த செயல்…!!

இரவு நேரம் வீட்டிற்கு தாமதமாக வந்த மகளை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஈரானின் கெர்மனை பகுதியை சேர்ந்த ரெஹானா அமெரி என்கிற பெண் நேற்று முன்தினம் வீட்டிற்கு இரவு 11 மணி அளவில் தாமதமாக வந்துள்ளார்.இதனால் கோபம் கொண்ட அவரது தந்தை காரணத்தை கேட்டுள்ளார். மகள் காரணத்தை சொல்வதற்குள் இரும்பு கம்பி ஒன்றால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ரெஹானா ரத்த வெள்ளத்தில் சரிய அவரை காரில் ஏற்றிக்கொண்டு நகருக்கு வெளியே சென்று மறைத்து வைத்துவிட்டு திரும்பியுள்ளார் தந்தை.

இந்த விவகாரம் குறித்து காவல்துறையினருக்கு தெரியவந்து தந்தை கைதுசெய்யப்பட்டு விசாரித்த பொழுது மகள் தொடர்பான தகவல் எதுவும் தனக்கு தெரியாது என கூறியுள்ளார். காவல்துறையினரின் தீவிர விசாரணை பிறகு தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு மகள் இருக்கும் இடத்தை தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற காவல்துறையினர் ரெஹானாவை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Categories

Tech |