கர்நாடக சுகாதாரத்துறை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மகள் ரக்ஷிதாவின் திருமண விழா 500 கோடி செலவில் நடைபெற இருக்கின்றது.
கர்நாடக மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் மகள் ரக்ஷிதாவுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் வருகின்ற வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த திருமணம் பெங்களூருவை மட்டுமல்லாமல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மகளின் திருமணத்தை திட்டமிட்ட கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு, ரூ 500 கோடியை செலவிட்டு பிரமாண்டமாக நடத்த இருக்கின்றார். கடந்த பிப்ரவரி 27-ம் தேதியே திருமண விழாக் கொண்டாட்டங்களை திட்டமிட்டு அமர்களமாக நடத்தி வருகின்றார்.
பெங்களூருவில் உள்ள அரண்மனை வளாகத்தில் 9 நாள் திருவிழா போல இந்த திருமண விழா நடைபெற்று வருகின்றது. வருகின்ற வியாழக்கிழமை நடைபெறும் மணவிழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா என அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் பங்கேற்கின்றனர். இதற்காக பிரமாண்ட திருமண அரங்கு 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 27 ஏக்கர் விழா அரங்குகள், 15 ஏக்கர் நிலம் வாகனங்களை நிறுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. மகளுக்கு திருமண மேக்கப் செய்ய பிரபல நடிகை தீபிகா படுகோனின் மேக்கப் மேனை அழைத்துள்ளார் அமைச்சர் ஸ்ரீ ராமலு.
இந்த அரங்க அமைப்புக்காக மட்டும் மூன்று மாதங்களாக இரவு பகலாக சுமார் 300 பேர் வேலை செய்தனர். 200 மேடை வடிவமைப்பாளர்களைக் கொண்டு மேடை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றது. இதில் அமைக்கப்பட்டுள்ள ஒரே பந்தியில் 7 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.