Categories
உலக செய்திகள்

27 வருடங்கள் விடுப்பின்றி பணிபுரிந்த தந்தை…. 1 கோடி ரூபாய் பரிசு கொடுத்த மகள்…!!!

அமெரிக்காவில் ஒரு மகள் 27 வருடங்களாக விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய தன் தந்தைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி கொடுத்திருக்கிறார்.

அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் மெக்கரன் என்ற சர்வதேச விமான நிலையத்தின் பர்க்கர் கிங் என்ற நிறுவனத்தில் காசாளர் மற்றும் சமையல்காரராக பணியாற்றிய கெவின் போர்டு என்ற நபர் 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றியிருக்கிறார். அவரின் மகளான செரீனா, தன் தந்தைக்கு பரிசளிக்க விரும்பி அதனை கோ-பண்ட்-மீ என்ற பக்கத்தில் பதிவிட்டு நிதி திரட்ட தொடங்கியுள்ளார்.

27 ஆண்டுகளாக தன் சகோதரி மற்றும் தன்னை நன்றாக கவனித்துக் கொண்ட தந்தைக்கு நன்றியாக இதனை செய்ததாக கூறியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து, பலரும் நிதி வழங்க தொடங்கினார்கள்.

https://twitter.com/i/status/1538542045824004100

இதன் மூலம் அவருக்கு 5000 டாலர் பணம் கிடைத்திருக்கிறது. அதாவது சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அவர் நிதியை திரட்டி தன் தந்தையிடம் கொடுத்திருக்கிறார். 27 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் சென்றதற்காக உரிய நிறுவனம் அவருக்கு சிறிய பரிசை வழங்கியிருந்தது. ஆனால், இணையதளவாசிகள் அவருக்கு ஒரு கோடிக்கும் அதிகமாக நிதியை கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

Categories

Tech |