முதல் கணவரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி விவகாரத்து பெற்று மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உறவினரான 25 வயது வில்லிங்டன் கிறிஸ்டோபர் என்பவரை அந்த இளம்பெண் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். வில்லிங்டன் மதுரை மாவட்டத்தில் சிவில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
அவ்வப்போது மனைவி வீட்டிற்கு வந்து செல்வார். சம்பவம் நடந்த அன்று வில்லிங்டன் மனைவியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது மனைவி தனது மகனுடன் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார். இந்த சூழலை பயன்படுத்திக்கொண்டு வீட்டிலிருந்த ஒன்பது வயது சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப்போல் பல தடவை நடந்து கொண்டுள்ளார்.
இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று சிறுமியை மிரட்டி உள்ளார். அதன்பின் வில்லிங்டன் வேலைக்கு சென்ற நேரத்தில் தனது தாயிடம் அழுதவாறே அந்த சிறுமி நடந்த சம்பவங்களை கூறி உள்ளார். இதை அறிந்த தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பின் தலைமறைவாக இருந்த வில்லிங்டன் என்பவரை மகளிர் இன்ஸ்பெக்டர் கலைவாணி கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தார்.