ஜெர்மன் நாட்டில் தந்தையை கொலை செய்துவிட்டு தப்பிய ஒரு பெண்ணை ஸ்பெயின் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் தந்தைக்கு அபின் கலந்த மருந்தையும் வலி நிவாரணிகளையும் கொடுத்து கொலை செய்திருக்கிறார். அந்த நபருக்கு உடல் நலம் சரி இல்லாததால் அந்தப் பெண்ணின் சகோதரர்கள் சந்தேகப்படவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்பு தான் அவர் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அந்த நபர் உயிரிழப்பதற்கு முன்பு அவரின் வங்கி கணக்கிலிருந்து அவரின் மகளின் வங்கி கணக்கிற்கு தொடர்ந்து பல பரிமாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. ஜெர்மன் நாட்டின் ஜேர்மன் ஃபெடரல் கிரிமினல் இன்வெஸ்டிகேஷன் அலுவலகமானது, தேசிய காவல்துறையிடம் உதவி கேட்டது.
அதன் பிறகு ஸ்பெயின் நாட்டின் தேசிய காவல்துறை, அந்த பெண்ணை கைது செய்திருக்கிறது. தற்போது ஜெர்மன் நாட்டிற்கு அந்த பெண்ணை நாடு கடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதே நேரத்தில் அந்த பெண்ணின் உடன் பிறந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.