கொரோனோ சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் கடவுச்சீட்டில் இருந்து வேறாக இருந்தால் பயணங்கள் தடை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்கள் கடவுச்சீட்டிலும் இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் பயணங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பல பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்த சமயத்தில் அவர்களின் பெயரில் ஒரு வார்த்தை அல்லது எழுத்தில் பிழை ஏற்பட்டிருக்கலாம்.
எனவே அதனை, கடவுச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் வேறாக இருக்கும் பட்சத்தில் கொரோனா சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது. இதன் காரணமாக கொரோனா சான்றிதழ்களை நன்றாக சரிபார்க்க அதிகாரிகள் கேட்டுள்ளார்கள். சுவிட்சர்லாந்தில் ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்களுக்கு இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கும்.
பல நபர்கள் இதில் மாட்டியிருக்கலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மையங்களுக்கு சென்று சான்றிதழில் உள்ள பிழைகளை சரி செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.