Categories
அரசியல் மாநில செய்திகள்

டப்பா பசங்க அவுங்க… அண்ணன் சொல்லி 1ஆளு வந்தாலும் …! அடக்கிடுவோம் பார்த்துக்கோங்க..!!

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான, கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், இந்த தேர்தல் ஆணையத்தின் உடைய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக சார்பில் நான் கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துச் சொன்னோம்.

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்தால், இடையில் மூன்று மாத காலத்தில், நான்கு மாத காலத்திற்கு தேர்தல் வந்தால் அவர்கள் வாக்களிக்க முடியுமா ? என்று கேட்டபோது, அவர்கள் 18 வயது பூர்த்தி ஆன பிறகுதான் வாக்களிக்க முடியும், அதுவரை பெயர்களை சேர்ப்பதற்கு பதிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதோடு மலைவாழ் மக்கள் அதிகமாக வாழுகின்ற பகுதிகளில் ஆறு கிலோ மீட்டர், ஏழு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பவர்களுக்கு வாக்கு சாவடி வசதிகளை இல்லை. அந்த பகுதிகளுக்கு எல்லாம் தேனி மாவட்டம், கோவை மாவட்டம், நெல்லை மாவட்டம் உட்பட மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரத்தில் எல்லாம் மலைவாழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் புதிய வாக்கு சாவடிகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்று அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சார்பாக கேட்டேன். கண்டிப்பாக செய்து தருவதாக, அதை ஒத்துக்கொண்டார்கள்.

அதோடு புதிதாக பி ஃபார்ம், ஆர் என்கின்ற ஒரு பார்ம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அந்த ஃபார்ம் எல்லோரும் ஆறரை கோடி மக்களும் வாக்காளர்களாக அதை புதிதாக பதிவு செய்தால் தான் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும், இல்லாவிட்டால் பெயரை எடுத்து விடுவார்கள், அதனால் புதிதாக ஒரு ஃபார்மை வாங்கி அதை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும், அதற்கும் மார்ச் 31 தேதி வரை கொடுத்திருக்கிறார்கள். அந்த ஃபார்மையும் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அப்போதுதான் தெரியும்.

இல்லாவிட்டால் சேர்க்க முடியாது. ஆக ஆதார் அட்டையை அதில் பதிவு செய்ய வேண்டும், ஆதார் பதிவு செய்ய விட்டாலும் அந்த 11 ஐ டி கார்டுகள் ரேஷன் கார்டு அல்லது வங்கி கணக்கு புத்தகம், Income tax  என எது இருந்தாலும் அதையும் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார்கள், இந்த கூட்டம் சிறப்பான ஒரு கூட்டமாக தான் இருந்தது. அண்ணன் ( ஓபிஎஸ்) அனுப்புகின்ற ஒரு ஆள் வந்தாலே போதும். அந்த மாதிரி  ( ஜெயக்குமார் ) டப்பா பசங்க  எல்லாம் அடக்கி விடுவோம் என விமர்சித்தார்.

Categories

Tech |