தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்திலிருந்து திரிஷா வெளியேறியதன் காரணம் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன் ,ஆடுகளம், வடசென்னை ,அசுரன் ஆகிய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தது . அதிலும் குறிப்பாக ஆடுகளம் படத்திற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளனர்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த டாப்ஸியின் கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மனதில் நிற்கிறது . இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் நடிகை திரிஷா. நான்கு நாட்கள் ஆடுகளம் படத்தில் நடித்து வந்த திரிஷாவிற்கு பாலிவுட் பட வாய்ப்பு வந்ததால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிகை டாப்சி நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.