தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் , கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் செல்வராகவன் இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் இரண்டு திரைப்படங்கள் உருவாகிறது. ஒன்று கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் படம் மற்றொன்று ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதோ!
உங்கள் பார்வைக்கு !#S12TitleLook @dhanushkraja @theVcreations @thisisysr @Arvindkrsna @RVijaimurugan@kabilanchelliah @kunaldaswani pic.twitter.com/zPpfHp5xT1— selvaraghavan (@selvaraghavan) January 13, 2021
அதில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகும் என இயக்குனர் செல்வராகவன் நேற்று ட்விட்டரில் அறிவித்திருந்தார் . அதன்படி இன்று தனுஷ்- செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. ‘நானே வருவேன்’ என்ற வித்தியாசமான டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.